CINEMA
மகனின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய மைனா நந்தினி.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இவரின் நகைச்சுவை காமெடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இதனிடையே சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நந்தினி சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினியின் இன்ஸ்டால் பக்கத்தில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர்.
இதனிடையே மைனா நந்தினி யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகனின் பிறந்தநாளை மைனா நந்தினி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உடன நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க