LATEST NEWS
சீரியலில் குடும்பம் பாங்காக இருக்கும் ராஜேஸ்வரி இது?.. இளம் நடிகைகளை மிஞ்சும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

தற்போது தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதே சமயம் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம்.
அதன்படி ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ராஜேஸ்வரி.
ஒரு பெண்ணுக்கும் அவரது மாற்றாந்தாய்க்கும் இடையேயான உறவை மையப்படுத்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த சீரியலில் தொடக்கத்தில் திவ்யா பத்மினி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு விலகியதை தொடர்ந்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஜேஸ்வரி நடித்து வருகின்றார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஜேஸ்வரி அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
அதாவது சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது யூத் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.