LATEST NEWS
“இது ஒரு படமே இல்ல”… மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை விமர்சித்த நடிகர் சிவகுமார்…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், தம்பி மாரி செல்வராஜுக்கு, நான் மாமன்னன் திரைப்படத்தை பார்த்தேன், இது ஒரு படமே இல்லை உங்கள் வாழ்க்கையில் நடந்த வழி.
பாதிக்கப்பட்ட ஒருவனால் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும். திரைப்படங்கள் மூலமாக நீங்கள் இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது விரைவில் சந்திப்போம் என்று கூறி சிவகுமார் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் நன்றி சார் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Heartfelt!! ❤️
Thank you #Sivakumar Sir for such praise! #Maamannan #MaamannanBlockuster #1onNetflix@Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3… pic.twitter.com/0qmdodVFAh— Mari Selvaraj (@mari_selvaraj) August 2, 2023