LATEST NEWS
“வருடத்தில் 2 முறை மட்டுமே”… அம்மா தான் எங்கள வளர்த்தாங்க… நவரச நாயகன் கார்த்திக் குறித்து மகன் கௌதம் உருக்கம்…!!
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இவர் கடந்த வருடம் இறுதியில் தான் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அண்மையில் கௌதம் கார்த்திக் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தையுடன் பிரிவு குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, அப்பா சித்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தான் அம்மாவை அவர் விட்டு பிரிந்து விட்டார். அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டதால் நானும் தம்பியும் தனிமையில் வாடினோம்.
அதன் பிறகு அப்பா சென்னையில் இருந்ததால் நானும் தம்பியும் ஊட்டியில் அம்மாவுடன் வசித்து வந்தோம். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே அப்பா போன் செய்து பேசுவார். எப்போதாவது எங்களை பார்க்க வருவார். சிறுவயதில் இருந்து என்னையும் என் தம்பியையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டது என் அம்மா மட்டும்தான் என தன்னுடைய தாய் மற்றும் தந்தை பிரிவு குறித்து கௌதம் கார்த்திக் வேதனையுடன் பேசியுள்ளார்.
