திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி?…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகர் விமல் வெளியிட்ட வீடியோ…..!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி?…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடிகர் விமல் வெளியிட்ட வீடியோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விமல். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கிரீடம்,குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார்.

இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விலங்கு இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் நேற்று நடிகர் விமல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது twitter பக்கத்தில் நலமுடன் படபிடிப்பிலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in