LATEST NEWS
எமி ஜாக்சனின் புது காதலர் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?.. அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு மூலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.
அதன் பிறகு சில காலம் தமிழ் சினிமா பக்கம் காணாமல் போன இவர் தற்போது அருண் விஜய் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இதனிடையே எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.
அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக எமி ஜாக்சன் காதலித்து வரும் நிலையில் அடிக்கடி அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது நீச்சல் உடையில் தனது புது காதலர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
