LATEST NEWS
மறைந்த மகளின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு போட்ட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்..!!
தென்னிந்திய சினிமா அளவில் பல திரைப்படங்களில் பணியாற்றி முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பிசி ஸ்ரீராம். இவர் தமிழில் வெளியான வா இந்த பக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மௌன ராகம், நாயகன், தேவர்மகன், முகவரி மற்றும் ரெமோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் மீரா, குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் மறைந்த தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட ஒரு உருக்கமான பதிவையும் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
