சொத்துக்காக சொந்த அப்பாவே இப்படியா?… மனம் உருகி பதிவு போட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சொத்துக்காக சொந்த அப்பாவே இப்படியா?… மனம் உருகி பதிவு போட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை…!!

Published

on

மலையாளத் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அர்த்தானு பினு.

இவர் தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான தொண்டன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி ஜீவி பிரகாசுக்கு ஜோடியாக செமஎன்ற திரைப்படத்தில் நடித்த இவர் கார்த்தி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது 26 வயது ஆகிறது. இவரின் அப்பாவும் பிரபல மலையாள நடிகர் தான்.

ஆனால் இவரின் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்றுவரை தங்களின் சொத்துக்காக அப்பா டார்ச்சர் செய்து வருவதாகவும் வீட்டுக்கு சுவர் ஏறி குதித்து அவர் வந்து செய்த அட்டகாசத்தை அர்த்தானு பினு கூறியுள்ளார்.

Advertisement

அதாவது சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த அவரின் தந்தை விஜயகுமார் வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டிருந்த பினுவை திறந்து கிடந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

உடனே காவல் நிலையத்திற்கு போன் செய்த நிலையில் பினு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Advertisement

சொத்துக்காக சொந்த அப்பாவே மகளையும் விவாகரத்து செய்த மனைவியையும் இப்படி தொல்லை கொடுப்பது சரியா என்று அவர் கூறி வீடியோவையும் பதிவிட்டு இருந்தார்.

தற்போது இவர் கொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதே சமயம் புகார் தொடர்பாக ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in