#image_title

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி.

இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும் கொள்ளையடித்த பெயர் இவருக்கு உண்டு.

பெங்காலி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் படங்களையும் தாண்டி சீரியலில் நடிக்க தொடங்கினார் .

அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோளங்கள் சீரியல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அந்த அளவிற்கு பெரிய வெற்றியை கண்டவர் தேவயானி. தற்போதும் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவரின் அழகிய நடிப்பை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் அந்த சீரியலுக்கு உள்ளது என்று கூறலாம்.

தற்போது அவ்வளவு அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் சீரியலில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தேவயானி.

இதனிடையே தேவையானிக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். அதில் சகோதரர் நகுல் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

தற்போது தேவயானியின் மகள் சொந்த ஊரில் உள்ள தோட்டத்திற்குச் சென்று சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்தப் புகைப்படத்தில் அப்படியே தேவயானி போலவே அவர் இருப்பதாக கூறி ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.