மகளின் திருமணத்தை சத்தம் இல்லாமல் முடித்த நடிகர் கருணாஸ்…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளின் திருமணத்தை சத்தம் இல்லாமல் முடித்த நடிகர் கருணாஸ்…. வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கருணாஸ்.

அந்த திரைப்படத்தில் ஒடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இவருக்கென தனி ஒரு அடையாளமாக மாறிவிட்டது.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சிம்புவின் குத்து மற்றும் அஜித் உடன் இணைந்து வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அந்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக ஜொலித்தார்.

இப்படி காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

கருணாஸ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரின் மனைவி கிரேஸ் என்பவரும் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

Advertisement

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களின் மகன் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதனைத் தவிர அழகு குட்டி செல்லம் மற்றும் ரகளபுரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இவ்வாறு கருணாஸ் குடும்பத்தில் மூன்று பேரும் சினிமாவில் இருக்க அவரின் மகள் டயானாவை மட்டும் சினிமா பக்கம் கொண்டு வராமல் வைத்திருந்தனர்.

Advertisement

டாக்டருக்கு படித்துள்ள டயானாவுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ஜோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement