மீனாவ அந்த கோலத்தில் நான் எப்படி பார்ப்பேன்… அதனால நான் போகல.. நடிகை மகேஸ்வரி எமோஷனல் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீனாவ அந்த கோலத்தில் நான் எப்படி பார்ப்பேன்… அதனால நான் போகல.. நடிகை மகேஸ்வரி எமோஷனல் ஸ்பீச்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை தான் மீனா. இவரின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனா கணவரின் இறுதி நிமிடங்களில் தான் பங்கு கொள்ளாத காரணம் குறித்து பிரபல நடிகை மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மீனாவின் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பர். இறுதியாக நான் அவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற இரவு விருந்து சந்தித்தேன்.

அவர் மிகவும் அன்பான மனிதர். அனைவரிடமும் நேர்மையாக நடந்து கொள்வார். மீனாவின் கணவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அறிந்ததும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உடனே சென்று அவரைப் பார்ப்பதற்கான மன தைரியம் எனக்கு இல்லை. அதுமட்டுமல்லாமல் எனக்கு அவரை பார்ப்பதற்கு விருப்பமும் இல்லை. ஏனென்றால் நான் அவரைப் பார்த்து விட்டால் அந்த ஒரு நெகட்டிவான மொமென்ட் எனது வாழ்க்கையில் மிக மிக மோசமான மறக்க முடியாத நினைவாக மனதிற்குள் இருக்கும்.

Advertisement

அவர் என்னை மேகி என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட ஒரு அன்பான மனிதரை நான் அங்கு அப்படியான சூழலில் பார்ப்பதற்கான விருப்பம் கிடையாது. மேலும் மீனாவை அந்த கோலத்தில் பார்ப்பதற்கு எனக்கு தைரியம் கிடையாது. எனவே துக்கமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று நடிகை மகேஸ்வரி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in