அம்மாவை சைக்கிளில் ஏற்றிச் சென்ற நடிகர் விஜய்… இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாவை சைக்கிளில் ஏற்றிச் சென்ற நடிகர் விஜய்… இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதிக்குள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. அதன் பிறகு விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது தாய் சோபாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பதிவு செய்தார்.

Advertisement

அடிக்கடி விஜய் தனது தாயுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது வழக்கம். அதன்படி தற்போது விஜய் தன்னுடைய சிறுவயதில் தனது தாயுடன் சைக்கிளில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in