முக்கிய பிரபலத்துடன் பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடிய நடிகை மீனா மகள்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முக்கிய பிரபலத்துடன் பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடிய நடிகை மீனா மகள்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். நடிகை மீனாவின் மகள் நைனிகாவிற்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. அப்போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீனா பகிர்ந்த நிலையில் தற்போது நடன இயக்குனர் கலா மாஸ்டர் உடன் மீனாவின் மகள் நைனிகா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in