LATEST NEWS
திரையரங்கில் துணிவு திரைப்படம் பார்த்த நடிகை நயன்தாரா…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், ஜான் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
கடந்த 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தை நடிகை நயன்தாரா திரையரங்கில் பார்த்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் நயன்தாரா துணிவு படத்தை பார்த்து விட்டார் என்று கூறி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
