LATEST NEWS
ஓணம் ஸ்பெஷல்.. மல்லிகை பூவுடன் படுக்கையறையில் போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி.பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தொடர்ந்து மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் மொட்டை சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு என்ன தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தன்னுடன் மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்த ஆதியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இவர் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஓணம் ஸ்பெஷல் ஆக நிக்கி கல்ராணி க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.