LATEST NEWS
47-வது பிறந்தநாளை மகள், மகன் என குடும்பத்தோடு சிம்பிளாக கொண்டாடிய நடிகை சோனியா போஸ்… பர்த்டே கிளிக்ஸ்…

நடிகை சோனியா போஸ் வெங்கட், தனது மூன்றாவது வயதில் மலையாளத் திரைப்படமான இவள் ஒரு நாடோடி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் தற்பொழுது கால் பதித்து கலக்கி வருகிறார்.
பிரபல சீரியல் நடிகையான இவர் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பல்வேறு படங்களிலும் தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவர் நடிகர் போஸ் வெங்கட்டை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் , பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் தனது 17 வயதில் நடிப்பிற்காக சென்னை குடியேறினார். தொடக்க காலத்தில் இவருக்கு கலைத்துறையில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.சன் டிவியின் மூலமாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘மெட்டி ஒலி’. இந்த தொடரில் நடித்தது மூலமாக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.
இவர் தமிழில் சிவாஜி ,மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வது வயதினிலே, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் திரையுலகில் கால்பதித்து கலக்கி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சோனியா போஸ் வெங்கட்.
இவர் தற்பொழுது தனது 47-வது பிறந்தநாளை குடும்பத்தோடு சிம்பிளாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.