ஷாலினியை திருமணம் செய்ய கட்டு கட்டாக வரதட்சனை கொடுத்த அஜித்… இதுவரை பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாலினியை திருமணம் செய்ய கட்டு கட்டாக வரதட்சனை கொடுத்த அஜித்… இதுவரை பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஷாலினி. என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினியாக நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளமே உள்ளது. முதல் முதலில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் ஒன்றாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரியாத வரம் வேண்டும். அதன் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. காரணம் தன்னுடன் ஒன்றாக நடித்த அஜித்தை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை ஓரம் கட்டினார். அதன் பிறகு கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பம் என கவனம் செலுத்த தொடங்கி விட்டார். சினிமாவை ஓரம் கட்டினாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய இடம் உள்ளது.

Advertisement

அதனைப் போலவே அஜித் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் அஜித் மட்டும் ஷாலினி காதல் திருமணம் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது ஷாலினியை திருமணம் செய்வதற்கு அஜித் தான் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறி அவர் சில தகவல்களை பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

YellowBench Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yellowbenchtamil)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in