CINEMA
“அன்று தளபதி இன்று தல” வைரலாகும் அஜித்-ஷாலினி திருமண பத்திரிக்கை….!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் அஜித். துணிவு படத்தையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை முடிப்பதற்குள் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க நடிகர் அஜித் தொடங்கிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் அஜித் -ஷாலினியின் கதை காதல் கதை அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் இருப்பவர்கள். இவர்களுக்கு கடந்த 2000 வருடம் திருமணம் முடிந்தது. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தான் நடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய்-சங்கீதா திருமண பத்திரிக்கை வைரலாகி வந்த நிலையில் தற்போது அஜித் ஷாலினின் பத்திரிக்கை வைரலாகி வருகிறது.