அம்மா ஆனார் விஜய் பட நடிகை பிபாஷா பாசு…. என்ன குழந்தை தெரியுமா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!! - cinefeeds
Connect with us

Uncategorized

அம்மா ஆனார் விஜய் பட நடிகை பிபாஷா பாசு…. என்ன குழந்தை தெரியுமா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. அப்ப படத்தில் விஜய், ஜெனிலியா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சச்சின் திரைப்படத்திற்கு பிறகு பிபாஷா பாசு வேற எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இன்றும் பாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அலோன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த கரன்சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெப் சீரிஸ் களில் நடித்து வந்தனர்.

Advertisement

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு திரை உலக்கினார் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bipasha Basu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bipashabasu)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement