LATEST NEWS
அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. குடும்பத்துடன் செட்டிலான லேட்டஸ்ட் புகைப்படம்..!!
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்கள் பலரும் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அதன்படி அண்ணாமலை தொடரில் நடித்து பல கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த தொடருக்குப் பிறகு திரை உலகில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் சினேகாவின் தோழியாகவும், ஜோதிகா அவர்களுக்கு தங்கையாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார்.
அதன் பிறகு இவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு துபாய்க்கு போக வேண்டிய சூழல் இருந்ததால் நடிப்புக்கு பிரேக் எடுத்துக் கொண்டதாகவும் அதன் பிறகு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் அப்படியே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கனடாவில் சூப்பர் சிங்கர் மாதிரி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
