LATEST NEWS
அடக்கொடுமையே..! “வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம்… இல்லன்னா…” சுடுகாடு அருகே கண்டெடுக்கப்பட்ட ‘அந்த’ கடிதம்… நள்ளிரவு 2 மணிக்கு நடந்த விபரீதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கானா காவல் எல்லைக்கு உட்பட்ட தும்ஜேடா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நல்ஹேடா கிராமத்தைச் சேர்ந்த அங்குர் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த காதலர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் சுடுகாடு அருகே உள்ள ஒரு வயல்வெளிக்குச் சென்று நஞ்ச அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
நஞ்ச அருந்திய பிறகு, அங்குர் தன் தெரிந்த நபர் ஒருவருக்குத் போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்களும் காவல்துறையினரும் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குரின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் சஹாரன்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி அங்குர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள அந்தப் பெண்ணிற்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்து காவல் துறையினர் ஒரு உருக்கமான தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதில், “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து வாழ முடியாது” என்றும், தங்களின் இந்த முடிவிற்கு யாரும் காரணம் இல்லை என்பதால் குடும்பத்தினரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் எழுதியுள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும் பெண் குணமடைந்ததும், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
