CINEMA
தனுஷின் “இட்லி கடை” படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்….? வெளியான தகவல்…!!

தனுஷ் இயக்கி நடிக்கும் 52 ஆவது படம் இட்லி கடை. பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ் சமீபத்தில் ராயன் படத்தை அவரை இயக்கி நடித்தார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இட்லி கடை படத்தை டான் பிசர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் ஷண்டர்பால் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு இட்லி கடை என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் சத்யராஜ், ராஜ்கிரன், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் அசோக் செல்வன் நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சில பல காரணங்களால் அசோக் செல்வன் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.