CINEMA
41 வயதில் இளம் நடிகையோடு டேட்டிங்கில் சிம்பு…? சீக்கிரம் திருமணமா…? வெளியான தகவல்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன் மகன். தன்னுடைய தந்தை போல பல திறமைகளை கொண்டவர் .தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை 41 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் 41 வயதாகும் இவர் இளம் நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலமாக இவர்களுடைய காதல் வளர ஆரம்பித்தது எனவும் நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை மாமா என்று கூப்பிட கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை’.