CINEMA
நடிகைகள் குறித்து அவதூறு…. மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு…!!!

நடிகைகளை தவறாக விமர்சித்ததாக கூறி மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் அளித்த புகாரில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.