LATEST NEWS
கணவருடன் கேக் வெட்டி கொண்டாடி…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகை ஜெனிலியா…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அதனால் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே கடந்த சில வருடங்களாக திரையுலகில் தலை காட்டாமல் இருந்த ஜெனிலியா தற்போது தன்னுடைய குழந்தைகள் வளர்ந்து விட்டதால் அடுத்து சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் தோன்றி வருகின்றார்.
அதே சமயம் தன்னுடைய கணவர் வேத் மராத்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இருவருமே அறிமுகமானது ஒரே திரைப்படம் என்பதால் இந்த நட்சத்திர ஜோடி திரை உலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மும்பையில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
