LATEST NEWS
நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து?…. விக்கிபீடியாவால் பரபரப்பு…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தின் வாரிசு திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சன் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பொதுவாக விஜயின் எந்த ஒரு பட நிகழ்ச்சி என்றாலும் அதில் அவரின் மனைவி சங்கீதா கலந்து கொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற அட்லி மற்றும் பிரியாவின் வளைகாப்பு விழா மற்றும் வாரிசு வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வரவில்லை. இதனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் விவாகரத்து செய்து பெரிய உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவில் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்து கொண்டதாக இடம் பெற்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மை தகவல் இல்லை என்பதால் சில நிமிடங்களில் இந்த தவறு சரி செய்யப்பட்டு விவாகரத்து பகுதி நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
