#BREAKING: CJP நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்காவுக்கு 5 நாட்கள் சிறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING: CJP நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்காவுக்கு 5 நாட்கள் சிறை..!!

Published

on

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் இடங்கள் பட்டியலிலிருந்து ஜந்தர் மந்தர் பகுதி நீக்கப்பட்ட பிறகும், இவர்கள் தடையை மீறி அத்துமீறி நுழைந்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக நேற்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு 5 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in