அதிர்ச்சி..! “போராடும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்” – ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மோகன்தாஸின் கேவலமான பேச்சு… நாடு முழுவதும் கொந்தளிப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! “போராடும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள்” – ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மோகன்தாஸின் கேவலமான பேச்சு… நாடு முழுவதும் கொந்தளிப்பு..!!!

Published

on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற நையாண்டி இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்து, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரும் பா.ஜ.க அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் மிக இழிவாகப் பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். போராட்டங்களில் கலந்துகொள்ளும் முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரிப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள் என்றும், அங்கு அத்தகைய கொடூரங்கள் நடந்தாலும் அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்றும் யூடியூப் வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

மேலும், அதிகாரம் தன் கையில் இருந்திருந்தால் போராட்டம் நடந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தி, மூன்று முறை எச்சரித்த பின்னும் கலைந்து செல்லாதவர்களைச் சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் அவர் வன்மத்தைக் கக்கியுள்ளார். 36 நாட்கள் அமைதியான முறையில் நடந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவோடு முடிவுக்கு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் பங்கேற்றவர்களை நோக்கி அவர் இத்தகைய கொடூரக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் சைபர் போலீஸார் மோகன்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மோகன்தாஸ் தற்போது தங்கள் அமைப்பின் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை என்றும், அது அவருடைய சொந்தக் கருத்து மட்டுமே என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவசர விளக்கம் அளித்து இந்த சர்ச்சையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in