LATEST NEWS
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளா இது?… அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்க.. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கொட்டாச்சி.இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.
தற்போது இவரின் மகளான மானஸ்வியும் சினிமாவில் நுழைந்துள்ளார். அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.
அப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தையாக நடித்து அசத்தியிருந்தார். அதில் சொட்ட சொரிகிடுவேன் என்ற க்யூடாக பேசி பலரையும் கவர்ந்தவர்.
அப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வகையில் தர்பார், எனிமி மற்றும் மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
அண்மையில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்த மாமனிதன் திரைப்படத்தில் மானஸ்வின் அடித்து அசத்தி இருப்பார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி சமீபத்தில் பகிர்ந்தார்.
அதில்,டெல்லி சர்வதேச திரைப்பட விழா திரையிடல் காரணமாக பணத்தில் சிறப்பாக நடித்த பேபி மானஸ்விக்கு இந்தி படத்தில் உடனே நடிக்க அழைப்பு வந்தது மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமான மானஸ் வி தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பத்து தல, சதுரங்க வேட்டை 2,கும்கி 2 உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ள நிலையில் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கொட்டாச்சியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.