LATEST NEWS
“பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி குடிக்கிறதோடு நிறுத்திக்கணும்” அதுக்கெல்லாம் கூப்பிடக்கூடாது… செவிட்டில் அடிச்சி அனுப்பிட்டாரா..? தயாநிதி மாறன் அதிரடி அட்டாக்..!!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் SIR முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ், டி. ராஜா உள்ளிட்ட 10 முக்கியத் தலைவர்கள் இணை மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தமிழகத்தில் புதிய ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் பெயர் இந்த மனுவில் இடம்பெறவில்லை. தவெக தங்களின் கொள்கை எதிரி பாஜகதான் என்று கூறினாலும், நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் விஜய் பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் தவிர்த்து வருகிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் விஜய்யின் பெயர் இந்த நீதிமன்ற மனுப் பட்டியலில் இல்லாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?” எனத் கிண்டலாகக் கேட்டுள்ளார். இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறையாததைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்குவங்கி இல்லாத ‘டம்மி பீஸ்கள்’ என்ற கம்பெனி சீக்ரெட் தற்போதைய டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ என்றும் தயாநிதி மாறன் சாடியுள்ளார்.
