LATEST NEWS
கோலிவுட் நட்சத்திரங்களுடன் 60வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் சங்கர்… வைரலாகும் பர்த்டே பார்ட்டி கிளிக்ஸ்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி அவரின் திரைப்பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
இவரை இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் நிலையில் ராம்சரண் நாயகனாக நடிக்கின்றார்.
மேலும் எஸ் ஜே சூரியா, அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றது.
அரசியல் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
அதேசமயம் இந்தியன் 2 திரைப்படத்தையும் சங்கர் இயக்கி வரும் நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் நேற்று தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதனை முன்னிட்டு கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி சங்கரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
அந்தப் பிறந்தநாள் பார்ட்டியில் இயக்குனர்கள் லோகேஷ் கணக்கராஜ், வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.