தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே.

இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த வருடம் கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இவானா, சத்யராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவானா.

இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் தற்போது இவானா ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது யார் என அனைவரும் குழம்பிய நிலையில் அந்த நபர் அவரின் twin பிரதர் என்று தெரியவந்துள்ளது. இவானா உடன் பிறந்த இரட்டை சகோதரர் லியோ தான் அவர் எனக்கூறி அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.