தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான்.
அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என்ற செய்தி வெளியானது. இது தொடர்பாக சிம்புவின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.