தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராதிகா 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த ராதிகாவின் மகள் ராதிகாவின் திருமண புடவையை தான் அவரும் திருமணத்திற்கு அணிந்திருந்ததாக கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.