LATEST NEWS
“நீ மான் குட்டி.. நான் யானைக்குட்டி”…. மனைவியை மயக்க ரவீந்தர் சொன்ன கவிதை…. வைரல் பதிவு….!!!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது.
அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வர இணையத்தில் பல விளம்பரங்களையும் செய்து வருகிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி அடிக்கடி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது மகாலட்சுமி உடன் காரில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரவீந்தர் ஒரு கவிதையை சொல்லி தனது மனைவியை வர்ணித்துள்ளார்.
அந்தப் பதிவில் நீ மஞ்சள் நிறம் கொண்ட மான்குட்டியோ, இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ, ஆனா உன் கூட வாழ்க்கையை ரசித்து வாழுற யானை குட்டி நான்தான் என்று ரவீந்தர் பகிர்ந்துள்ள நிலையில் அதற்கு மகாலட்சுமியும் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க