CINEMA
767K லைக்குகள்…. 22,202,920 பார்வையாளர்களை கடந்த “கங்குவா” டிரெய்லர்…. சூர்யா போட்ட X பதிவு வைரல்…!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வாசம். இந்த படத்தையடுத்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் அக்.10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விரைவில் சந்திக்கலாம் என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ட்ரெய்லர் தற்போது வரை 22,202,920 பார்வைகளையும், 767K லைக்குகளையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.