CINEMA
“தெறிக்க விடலாமா” விஜய் வாங்கிய சொகுசு கார்…. வீட்டிலிருந்து வெளியான மாஸ் வீடியோ…!!!
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் கோட் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் புதிய ஆடம்பர சொகுசு கார் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஆடம்பர சொகுசு கார் மாடல் விஜய்யின் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விஜய் பயன்படுத்தி வரும் வாகனங்களின் பட்டியலில் இதுவும் தற்போது இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் மதிப்பானது ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் புத்தம் புதிய சொகுசு கார்
இணையத்தில் பரவும் வீடியோ#ActorVijay #TVK #Vijay #Car #Vijaynewcar #Lexus #lexuslm pic.twitter.com/2gj6tRXN3r
— Thanthi TV (@ThanthiTV) August 13, 2024