தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கிரேசி மோகன். இவர் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் மேடாக நாடக கலைஞரும் ஆவார். 1929 ஆம் ஆண்டு கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழில் இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 100க்கும் மேல் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
இவ்வாறு பல புகழுக்குரிய இவர் நளினி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அர்ஜுன் என்ற மகன் உள்ளார். அவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஹரிதா என்ற பெண்ணுடன் திருமண நடைபெற்ற நிலையில் அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
