#image_title

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பிறகு சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதுவரை பல்வேறு காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது ஹீரோவாகவும் அவதாரம் இருக்கிறார்.தற்போது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய படத்தில் ஹீரோவாக நடித்த கமிட் ஆகியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரிக்கு திருமணம் ஆகி வெண்ணிலா மற்றும் சர்வன் என்ற ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரின் குழந்தைகளின் புகைப்படங்கள் அனைவரும் பார்த்தது தான். தற்போது சூரி மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.