பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் இவரின் பெயர் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு சினிமாவில் அதிகம் சம்பாதித்து பல தொழில்களையும் நடத்தி வருகின்றார். இவர் சினிமா மட்டுமல்லாமல் ஐபிஎல் டீம் ஒன்றை வாங்கி நடத்தி வருகிறார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளது. ஷாருக்கான் பல சொகுசு பங்களா மற்றும் கார்கள் வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அணிந்திருந்த ப்ளூ வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலை மட்டும் சுமார் 4.98 கோடி ரூபாய் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. சாதாரண மக்கள் வாழ்க்கை முழுக்க சேர்த்து வைத்தாலும் அந்த ஒரு வார்த்தை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.