LATEST NEWS
ச்ச கொடூரம்..! போலீசுக்கு பயந்து மனைவிக்கு நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி… இப்படியொரு கணவனா..? நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்..!!!
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை மறித்து காவலர்கள் அபராதம் விதித்து வந்தனர்.
அந்த சமயத்தில், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தூரத்திலேயே காவலர்கள் வாகன சோதனை செய்வதைக் கண்டுள்ளார். போலீசாரிடம் மாட்டாமல் தப்பிப்பதற்காக அவர் திடீரென பைக்கை வேகமாக திருப்பியுள்ளார். இதனால் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
மனைவி சாலையில் விழுந்ததை கவனித்தபோதிலும், அந்த நபர் பைக்கை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். சாலையில் விழுந்த அந்தப் பெண்ணை அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக மீட்டு உதவினர். அதிர்ஷ்டவசமாகப் பெண்ணிற்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.
