தமிழ் சினிமாவில் 90களில் காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரைக்கும் பல பாடல்களில் தனது இனிமையான குரலால் பலரது மனதையும் கொள்ளை கொண்டவர் தான் பிரபல முன்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம். இவரை கட்டாயம் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

அந்த அளவிற்கு தனது பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர். சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். முதலில் பிரபல இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல் ஒன்றில் குரு பாடகையாக தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் மின்சார கனவு படத்தில் வெளிவந்த அன்பென்ற மழையிலே என்ற பாடலின் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாள மற்றும் கன்னட முள்ளிட்ட பழமொழிகளிலும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். பல்வேறு புகழுக்குரிய இவர் இசைப் போட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகின்றார்.

இசை மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார் அனுராதா. இவரைத் தொடர்ந்து அவரது கணவரும் பிரபல பாடகர் தான். அனுராதா கணவரின் பெயர் ஸ்ரீராம் பரசுராம். இவர் இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஆவார்.இந்நிலையில் அனுராதா மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது