விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடருக்கு அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அதற்குக் காரணம் கூட்டுக்குடும்பம் பற்றிய கதைதான்.

அண்ணன் தம்பி பாச கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.

தற்போது வீட்டில் மூன்று மருமகள் கர்ப்பமாக இருக்க மீனா அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது கையில் பணம் இல்லாததை உணரும் ஜீவா அண்ணனிடம் கோபமாக நடந்து கொள்வது என இனிவரும் வாரங்களில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் சீரியலில் நிகழ உள்ளது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் சரவணன் விக்ரம்.

இவர் இதற்கு முன்பு பல சீரியல்களை நடித்திருந்தாலும் இவருக்கென தனி ஒரு அடையாளம் கிடைத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் தான்.

இவருக்கு அதிக ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.

இவர் சீரியலில் பேசும் குறும்புத்தனமான பேச்சுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது கண்ணன் ஓரளவிற்கு குடும்ப பொறுப்பு வந்து தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரின் தங்கைக்கு நிஜத்தில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது சரவணன் விக்ரமின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.