ஜெயில் ‘இதெல்லாம் ஒரு பொழப்பு’…? ரஜினிக்காக கூப்டுவங்களா…!வெளிவந்த பிக் பாஸ் உண்மைகள் – ரேகா நாயர்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜெயில் ‘இதெல்லாம் ஒரு பொழப்பு’…? ரஜினிக்காக கூப்டுவங்களா…!வெளிவந்த பிக் பாஸ் உண்மைகள் – ரேகா நாயர்..!

Published

on

நேற்றைய தினம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 சூப்பர் ஹிட் ஆக முதல் நாள் ஒளிபரப்பானது. அதை பற்றி நடிகை ரேகா நாயர் தனியார்  யூடியூப் சேனலில் பிக் பாஸ் குறித்து ஒரு சில செய்திகளை பகிர்ந்துள்ளார். எனக்கு பிடித்த இடம் என்றால் 100 நாள் என்ன ஆயிரம் நாள் கூட என்னால் இருக்க முடியும். எனக்கு பிடித்த உணவு இருக்கிறது அதை 100 நாள் சாப்பிட வேண்டும் என்றாலும் நான் சாப்பிடுவேன். ஆனால் பணத்திற்காக பிரபலத்திற்காக அங்கு செல்வது எனக்கு சரியாக தோன்றுவதில்லை.

அதற்கு 100 செடி வைத்தால் என்னுடைய வாரிசுகளாவது நன்றாக இருக்கும் முதல் சீசனில் எனக்கு தெரிந்தவர்கள் சென்றார்கள் அவர்களிடமே இதெல்லாம் என்ன ஒரு பொழப்பு என்று கேட்டேன்.  இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. இப்போது அவர்கள் முழுக்க முழுக்க அந்த நிகழ்ச்சியை ஸ்கிரிப்டாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் சொன்னபடி நான் நடிப்பதற்கு பதிலாக சீரியலில் நடித்து விட்டு சென்று விடுவேன். நான் பிக் பாஸ் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சாரின் ஹீரோயினியாக என்னை கூப்பிட்டு விடுவார்களா?..

Advertisement

ஒருவருக்கு அறிவில்லை என்றால்தான், பள்ளியில் சென்று விட வேண்டும். நடிக்கவே தெரியவில்லை என்றால்தான், உங்களை ஆக்டிங் ஸ்கூலில் சென்று விட வேண்டும். இல்லை, ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றால் அங்கு செல்லலாம். அதற்கு பதிலாக, இங்கு இருந்து 100 நாட்கள் 100 விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான மனிதர்களை சந்தியுங்கள். ஜெயிலில் இருப்பதும், அங்கு இருப்பதும் என்னைப் பொருத்த வரை ஒன்றுதான்.

கமலஹாசன் என்ற மிகப்பெரிய பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்த அவரையும் வியாபாரம் பேசுகிறார். அவருக்கு அது தெரியவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை அவர் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும், என்று நடிகை ரேகா நாயர்  பேசியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in