Uncategorized
சமந்தாவுக்கு அதை கொடுத்த ஜிம் டிரைனர்…. கட்டிப்பிடித்து போட்டோ வெளியிட்ட சமந்தா…. வைரல் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகிநர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சமந்தா யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமந்தா அவரின் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சமந்தாவின் ஜிம் ட்ரைனர் அதனை கொண்டாடுவதற்கு அவருக்கு ஜிலேபி கொடுத்துள்ளார். அதற்காக அவரை கட்டிப்பிடித்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நன்றி கூறியுள்ளார் சமந்தா. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
