“காஞ்சனா படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறு”… திருநங்கை பிரியா அதிர்ச்சி பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காஞ்சனா படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறு”… திருநங்கை பிரியா அதிர்ச்சி பேட்டி..!!

Published

on

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காஞ்சனா. திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், கோவை சரளா, ராய் லட்சுமி மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதேசமயம் முக்கியமான கதாபாத்திரமான திருநங்கை ரோடில் சரத்குமார் நடித்திருந்தார்.

இவரின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதே சமயம் இவரின் மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார். இந்நிலையில் காஞ்சனா படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று சமீபத்தில் பிரியா அளித்துள்ள ஒரு பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதாவது காஞ்சனா திரைப்படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதற்கு முன்பு வரை நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் அதன் பிறகு எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேலை எதுவும் என்னால் பார்க்க முடியவில்லை என்று திருநங்கை பிரியா பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in