ஷாக் கொடுத்த தங்கம் விலை…! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு…! இன்றைய விலை நிலவரம் இதோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாக் கொடுத்த தங்கம் விலை…! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு…! இன்றைய விலை நிலவரம் இதோ…!!

Published

on

கடந்த சில நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று திடீரென அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. நேற்று சவரனுக்கு 1,680 ரூபாய் வரை குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு 640 ரூபாய் வரை விறுவிறுவென அதிகரித்துள்ளது.

இந்த விலை மாற்றத்திற்குப் பின், சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,05,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வரும் தங்கத்தின் விலையானது, நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் 1,16,000 ரூபாயைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தங்கத்தின் விலையைப் போன்றே இன்று வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கிலோவுக்கு 10,000 ரூபாய் வரை சரிந்திருந்த வெள்ளி விலை, இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாயாக விற்பனையாகிறது.

இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை 5,000 ரூபாய் உயர்ந்து, தற்போது சந்தையில் 2,35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்புகள், இன்று வாரத்தின் இறுதி நாட்களில் மீண்டும் ஏறுமுகத்திற்கு மாறியிருப்பது நடுத்தரக் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in