தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…. திமுகவுடன் 9 ஆண்டு கால பந்தம் முடிகிறதா…? ஆதங்கத்தை வெளிபடுத்திய வைக்கோ…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…. திமுகவுடன் 9 ஆண்டு கால பந்தம் முடிகிறதா…? ஆதங்கத்தை வெளிபடுத்திய வைக்கோ…!!!

Published

on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் அரசியல் களம் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தங்களை அவமதித்துவிட்டதாகக் கூறி கூட்டணியில் இருந்து விலகுவதை மறைமுகமாக கூறியுள்ளார்.

பலமில்லாத பிற கட்சிகளுக்கு அதிக இடங்களை வாரி வழங்கிய திமுக, தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என சாடியுள்ளார். மேலும், இத்தனை காலம் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் கூட்டணியில் நீடித்ததாக ஆதங்கப்பட்ட வைகோ, அடுத்தகட்ட முடிவு குறித்து பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக, அடுத்ததாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் தெளிவான சிந்தனையோடு இருப்பதாகப் பாராட்டிய வைகோ, அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மதிமுக 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எழுந்த வதந்திகளுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அதிரடி நகர்வுகள் காரணமாகத் தவெக-விற்கு மதிமுக தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்போவது உறுதியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in