LATEST NEWS
கோலாகலமாக நடந்து முடிந்த கவின்- மோனிகா திருமணம்… முதன்முறையாக இணையத்தில் வெளியான கவின் தாலி கட்டும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் கவின். இதற்கு முன்னர் திரையுலகில் இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
திறமை, உழைப்பு ,நம்பிக்கையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக நிறைய பேரை நாம் கூறலாம். அந்த வரிசையில் தற்போது நடிகர் கவினும் இணைந்துள்ளார். இவர் திரைப்படங்களில் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம். இத்திரைப்படத்தை பார்த்த தனுஷ், கார்த்தி என பல பிரபலங்களும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் கவினுக்கு தற்பொழுது நல்ல பெயர் கிடைத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.
டாடா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்து இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் கவின் தனது நீண்ட நாள் காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இத்திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram