“சீருடையில் இப்படியா..?” மதுக்கடை வாசலில் கால்களை மேலே தூக்கி போலீஸ் செய்த வேலையை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சீருடையில் இப்படியா..?” மதுக்கடை வாசலில் கால்களை மேலே தூக்கி போலீஸ் செய்த வேலையை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூடில் காவல் சீருடை அணிந்த போலீஸ்காரர் ஒருவர் மதுக்கடையின் வெளியே போதையில் தலைகீழாகக் கிடக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித்ரகூட் சதர் கோத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையின் வெளியே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ‘டயல் 112’ அவசரப் பிரிவில் பணியாற்றி வரும் தீபக் பிரகாஷ் என்ற அந்த போலீஸ்காரர், கடமையின் போது முழுமையாக மதுபோதையில் மூழ்கி, நாற்காலியில் கால்களை மேலே தூக்கியவாறு தலைகீழாகத் தொங்கி சுயநினைவின்றித் தூங்கியுள்ளார்.

“நான் உயிரோடு இருக்கும் வரை என்னை வாழ விடுங்கள், கொட்டும் மழையில் என்னை குடிக்க விடுங்கள்” என்ற பிரபலமான இந்திப் பாடலின் வரிகளுடன் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. காவல் சீருடையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பொது இடத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்ட அந்த போலீஸ்காரரின் ஒழுங்கீனம் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சித்ரகூட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறைரீதியான கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in